உலகில் முதல் தடவையாக விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது.
கார்னிவக்-கோவ் (Carnivac-Cove) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, விலங்குகளின் ஆரோக்கியத்திற்காக செயற்படும் பெடரல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியின் ஆரம்பகட்ட பரிசோதனைகளின் போது பக்க விளைவுகள் தென்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கார்னிவாக்-கோவ் (Carnivac-Cove) தடுப்பூசி தொடர்பான பரிசோதனை கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்போது நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள், மிங்க், நரிகள் மற்றும் பிற விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
பரிசோதனையின் முடிவில் தடுப்பூசி பாதிப்பல்லாததது எனவும், தடுப்பூசிகளை செலுத்திய விலங்குகளின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிரீஸ், அவுஸ்திரேலியா, போலந்து, கனடா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏற்கனவே கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதுடன், இதனால் ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம் என்று ரஷ்யாவின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.