ஹொங்கொங்கில் அரசியல் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைப்பதற்கான சீனாவின் நடவடிக்கைகளை ஐக்கிய இராஜ்ஜியமும் அமெரிக்காவும் கடுமையாக கண்டித்துள்ளன.
“சீனா ஹொங்கொங்கின் தேர்தல் முறைமையில் மாற்றங்களைச் செய்தது, இது கூட்டுப் பிரகடனத்தின் தெளிவான மீறலாகும்.
இது ஹொங்கொங் மக்களின் சுதந்திரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் பீஜிங் சர்வதேச கடமைகளை மீறுகிறது” என்று பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் (DOMINIC RAP) தெரிவித்தார்.
அதேநேரம் ஹொங்கொங்கின் தேர்தல் முறைமையின் மாற்றங்களால் அமெரிக்கா ‘ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது’ என்றும், ‘அங்குள்ள உள்ள மக்களின் விருப்பத்தை’ அரசாங்கம் மீறுவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.