அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முன்னாள் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர், தங்களின் அதிகாரபூர்வ இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இணையதளமான இந்த இணையதளம், 45office.com என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பின் நேரத்தை சுருக்கமாகக்கொண்ட ஒரு பக்கத்தையும், முன்னாள் ஜனாதிபதியிடம் ஆதரவாளர்கள் கருத்துகளை சமர்ப்பிக்கக் கூடிய மற்றொரு பக்கத்தையும் இந்த இணையதளம் கொண்டுள்ளது.
வலைத்தளங்களில், ஆதரவாளர்கள் நிகழ்வுகளில் பங்கேற்கக் கோருவதற்கும், கடிதங்களைச் சமர்ப்பிப்பதற்கும், தனிப்பட்ட வாழ்த்துக்களைக் கோருவதற்கும் இந்த இணையதளத்தில் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.