வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட பெருமளவு பணம், வைப்பிலிடப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரின் தனியார் வங்கிக் கணக்கிற்கு,, வெளிநாட்டிலிருந்து ஒரு கோடி 34 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம், கிடைத்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, முறையற்ற விதத்தில் சிறிலங்காவுக்கு பணம் அனுப்பப்படுவது குறித்து, விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 14 கோடி ரூபா பணம், இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக, ஏற்கனவே சுமார் 30 சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நபர்களே, இவ்வாறான நடவடிக்கைகளில் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.