ஏப்ரல் 4ஆம் நாள் இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்துள்ளது.
வரும் 6ஆம் நாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில், 4ம் நாள்யுடன் பிரசாரம் முடிவடைகிறது.
பொதுவாக தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பாக மாலை 5 மணி வரை மட்டுமே பிரசாரத்திற்கு காலஅவகாசம் வழங்கப்படுகின்ற போதும். இம்முறை அந்த அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரசாரம் செய்வதற்கு கடைசி நாளான ஏப்ரல் 4ம் நாள் கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது. அதன் காரணமாக அரசியல் கட்சியினர் மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.