சீனாவுக்கும். ஈரானுக்கும் இடையில், கடந்த வார இறுதியில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி என இருநாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டணி அடுத்த கால் நூற்றாண்டு பகுதி வரை தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள விடயங்கள் குறித்த தகவல்கள் எதுவும், வெளிவரவில்லை.
இருப்பினும் அமெரிக்காவின் தடைகளை மீறும் வகையில், ஈரானிடமிருந்து சீனா எண்ணெய் வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்கியிருப்பதாக கூறப்படுகிறது.