சீன அதிகாரிகளின் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தலை அடுத்து, பிபிசியின் பீஜிங் செய்தியாளர், ஜோன் சுட்வோர்த் (John Sudworth) சீனாவை விட்டு வெளியேறி, தாய்வானைச் சென்றடைந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக சீனாவில் தங்கியிருந்த செய்தியாளர், ஜோன் சுட்வோர்த், நேற்று தனது குடும்பத்தினருடன் பீஜிங்கை விட்டு வெளியேறியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜின்ஜியாங் (Xinjiang ) மாகாணத்தில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் உய்குர் (Uyghur) இன மக்கள், சீனாவில் நடத்தப்படும் விதம் குறித்து, ஜோன் சுட்வோர்த் அறிக்கையிட்டிருந்தார்.
இதையடுத்து, சீன அரசினால் அவர் அச்சுறுத்தப்பட்டதுடன், பிபிசி செய்தி சேவைக்கும் தடைவிதிக்கப்பட்டது.
தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை அடுத்து ஜோன் சுட்வோர்த் பீஜிங் விமான நிலையம் ஊடாக தாய்வானுக்குச் சென்றுள்ளார்.