உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சரக்கு கப்பல் எவ்வாறு தரை தட்டியது என்பது குறித்து எகிப்து அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, கப்பல் தரைதட்டியது தொடர்பான தகவல்களை சூயஸ் கால்வாய் அமைப்பின் அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.
இதற்காக, எவர் கிரீன் கப்பலை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புழுதிப்புயல் காரணமாக கப்பல் தரைதட்டியதாக கூறப்படும் நிலையில், கப்பலின் மிதக்கும் திறன், கப்பல் குழுவினரின் நடவடிக்கைகள், கப்பலில் தொழில்நுட்பக்கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எவர் கிரீன்’ என்ற சரக்கு கப்பல், கடந்த 23ஆம் திகதி உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்றது.
புழுதி புயல் காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்கே திரும்பி தரைதட்டி நின்றதாக கப்பல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.