ஜேர்மனியில் 60 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ஜேர்மனியில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 60 வயதிற்கும் கீழ் உள்ள பலருக்கு ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 60 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டை கட்டுப்படுத்த ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளதுடன், 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, சிக்கல் இல்லை என்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும், ஜேர்மனி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.