கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக குறைக்குமாறு, மாகாண அரசிடம் கோரியுள்ளதாக ரொறன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி (John Tory ) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தாம் நேற்றுக் காலை மாகாண முதல்வர் டக் போர்ட்டுடன் பேசியதாகவும், கூடிய விரைவில், இந்த மாற்றம் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாற்றத்துக்கு நாட்கள் தேவைப்படாது, சில மணித்தியாலங்களிலேயே நிகழும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ரொறன்ரோ மாநகரசபை அரை மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை செயற்படுத்தியிருப்பதாகவும், ஏனைய மாநகரங்களை விட ரொறன்ரோ விரைவாக செயற்பட்டுள்ளது என்றும், மாநகர முதல்வர் ஜோன் ரொறி மேலும் தெரிவித்துள்ளார்.