தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்பதால், பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பிரசாரம் செய்வதை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
“தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கடலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 பாகை வரை உயரக்கூடும்
வெயில் மற்றும் அனல்காற்று காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை தவிர்ப்பது நல்லது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளது.