தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் தான், பேசவில்லை என தேர்தல் திமுக. நாடாளுமன்ற உறுப்பினர் ராசா தேர்தல் ஆணைக்குழுவிடம் அளித்த விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக. நாடாளுமன்ற உறுப்பினர்.ராசா ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரம் செய்தபோது முதல்வர் பழனிசாமி குறித்தும் அவரது தாயார் குறித்து அவதுாறான கருத்துக்களை தெரிவித்தார் என்று, அ.தி.மு.க. சார்பில் தமிழக தேர்தல் ஆணையரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க ராசாவுக்கு உத்தரவிடப்பட்டதை அடுத்து, அவர் எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.
“எனது பேச்சின் முழு காணொளியையும் பார்த்தால், தற்போதைய குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக திரித்து வெளியிடப்பட்டது தெரியும்.
அதிமுகவினர் என்மீது என்னென்ன புகார்கள் வைத்து உள்ளனர் என்பதை எனக்கு விளக்கமாக கூறினால், தான் விளக்கமாக பதில் அளிக்க வாய்ப்பு இருக்கும்.
நான் என்ன தவறாக பேசினேன் என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.