நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
51 ஆவது தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார்.
இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு சார்பில் தாதாசாகேப் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதாக இது கருதப்படுகின்றது.
கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருதுஅறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து ரஜினிகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.