பிரேஸில் நாட்டின் முப்படை தளபதிகளும் பதவி விலகியுள்ளதால் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சோனாரோ (Jair Bolzano) பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
முப்டையினர் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சி செய்தமையால் அவர்கள் இவ்வாறு பதவி விகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்பத்துவதில் பிரேஸில் ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கும் நடவடிக்கையால் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என பிரேஸில் ஜனாதிபதி தொடர்ந்தும் வாதிட்டார்.
பிரேஸில் ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக அண்மையில் அந்த நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களும் தமது பதவியில் இருந்து விலகினார்.
இதன் காரணமாக பிரேஸில் ஜனாதிபதிக்கு தமது அமைச்சரவையை மாற்றயமைக்க நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.