நைஜரில், ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
நைஜர் ஜனாதிபதி மாளிகை அருகே இடம்பெற்ற மோதல்களை அடுத்து இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியுடன் தொடர்புபட்ட பாதுகாப்பு படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 3 மணியளவில் ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும், குண்டுச் சத்தங்களும் கேட்டதாக செய்திகள் கூறுகின்றன.
நைஜர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மொகமட் பசூம் (Mohamed Bazoum) பதவியைப் பொறுப்பேற்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆட்சியைக் கைப்பற்றும் இந்த முயற்சி இடம்பெற்றுள்ளது.
நாட்டின் தற்போதைய ஜனாதிபதியும், தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதியும், பாதுகாப்பாக இருப்பதாக, முன்னாள் அமெரிக்க தூதுவர் பீற்றர் பாம் (Peter Pham) அறிவித்துள்ளார்.