யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒருவரை, விளக்கமறியலில் வைக்க மல்லாம்ம் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
வட்டுக்கோட்டை – மாவடியில் வீடொன்றில் நேற்றுமுன்தினம் மாலை சுற்றிவளைப்பை மேற்கொண்ட காவல்துறையினர், ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றியதுடன், 50 வயதுடைய வீட்டின் உரிமையாளரையும்,, அங்கு வந்திருந்த மற்றொருவரையும் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிரதான சந்தேகநபரான வீட்டின் உரிமையாளரை எதிர்வரும் 14 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
கைது செய்யப்பட்ட மற்றைய நபருக்கும் போதைப்பொருளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று பிரதான சந்தேகநபர் கூறியதை அடுத்து அவரை விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.