இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக வானூர்தி நிலையங்களில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள வானூர்தி நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வானூர்தி நிலையங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என தெரிய வந்துள்ளது.
எனவே, அனைத்து வானூர்தி நிலையங்களிலும் அனைவரும் சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இதனை மீறினால் அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.