ஹமில்டனில், நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்து ஒன்றில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 5.20 மணியளவில் ஹமில்டனில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், இதையடுத்து தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மாடியில் இருந்து கடுமையான புகை வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அதனுள் சிக்கியிருந்த ஒருவர் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும், தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.