சிறிலங்காவில் பதிவுச் செய்யப்பட்ட மீன்பிடிப் படகு 300 கிலோ ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன், இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
´ரவி ஹன்ஸி´ என்ற அந்தப் படகு கேரள கடற்பகுதியில், கைப்பற்றப்பட்டதாகவும் அதில் சிறிலங்காவைச் சேர்ந்த 6 பேர் இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில், இருந்து ஐந்து ஏ.கே-47 ரக 5 துப்பாக்கிகளும், ஆயிரம் துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் போலி ஆவணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கைதான 6 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் ஈரானில் இருந்து கொண்டு வரப்பட்டு மீன்பிடிப் படகில் கையளிக்கப்பட்டிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.