கனடாவில் 5 மில்லியன் பேர் இதுவரையில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியின் முதல் மருந்தளவைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 27 மில்லியன் பேருக்கு முதல் மருந்தளவு கூட பெறமுடியாத நிலைமைகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, 12 முதல் 15 வயதுடைய சிறார்களுக்காக 1.4 மில்லியன் தடுப்பூசி அவசியமாகவுள்ளது.
மேலும் கனடியர்கள் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை நிராகரிப்பார்கள் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் யாவும் நாளாந்த பொது சுகாதார புள்ளிவிபரத் தரவுகளின் அடிப்படையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.