எத்தியோப்பியாவின் மத்திய பகுதியில் ஒரோமியா பிராந்தியத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் மேலும் 18 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக எத்தியோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரோமியா விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள், கிராமத்துக்குள் புகுந்து கொண்டதை அடுத்து, அங்கிருந்த மக்கள் புதர்களுக்குள் மறைந்து கொண்டனர் என்றும், அவர்களின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
மறுநாள் காலை இறந்தவர்களின் உடல்களை கண்டுபிடித்து, 30 சடலங்களை அடக்கம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எதியோப்பிய ஜனாதிபதியும், ஒரோமியா பிராந்திய அரசும் கண்டனம் தெரிவித்துள்ளன