சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்காமல், இந்திய அரசு ஏன் புறக்கணித்தது என்று, திமு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாட்சியே சாட்சி என்றும், அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேட்டுபாளையத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ‘ மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதே பழனிசாமியின் குறிக்கோள் என்றும், தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சிஏஏ சட்டத்தை ஏற்கமாட்டோம். நீட் தேர்வை திரும்ப பெறுங்கள், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யுங்கள் என்று முதல்வர் பழனிசாமிக்கு சவால் விடுவதாகவும். ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.