எதிர்வரும் சனிக்கிழமை முதல் அடுத்த நான்கு வாரத்திற்கு ஒன்ராரியோ மாகாணம் முழுவதும் முடக்கல் நிலை அமுலாக்கப்படவுள்ளதாக முதல்வர் டக்போர்ட் அறிவித்துள்ளார்.
ஒன்ராரியோவில் உள்ள 34 சுகாதாரப் பிரிவுகளிலும் இந்த அமுலாக்கம் இறுக்கமாக பின்பற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது வெளிகளில் கூடுவது, உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் கூடுவது உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதோடு, கட்டுப்பாடுகளை மீறும் எவர் மீதும் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பாரபட்மின்றி எடுக்கப்படும் எனவும் முதல்வர் போர்ட் அறிவித்துள்ளார்.