ஒன்ராறியோவில் நேற்று 2ஆயிரத்து 500இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 23 மரணங்களும் பதிவாகியுள்ளதாக, மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாத இறுதிக்குப் பின்னர், இதுவே அதிகபட்ச தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தர்ப்பம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜனவரி 22ஆம் நாள், 2ஆயிரத்து 662 தொற்றாளர்கள் அதிகபட்சமாக கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 2 ஆயிரத்து 557 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த வாரம், எழு நாட்கள் சராசரியாக ஆயிரத்து 794 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த வாரம் அந்த எண்ணிக்கை, 2 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த பெப்ரவரி 25 ஆம் நாளுக்குப் பின்னர், நேற்று அதிகளவாக 23 மரணங்கள் பதிவாகியுள்ளது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.