கொரோனா தொற்று சவால்கள் மற்றும் தாமதங்களுக்கு மத்தியில், கனேடிய வான்படைக்கு புதிய போர் வானூர்திகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
கனேடிய வான்படையின் பழைய CF-18 போர் வானூர்திகளுக்குப் பதிலாக, 88 புதிய வானூர்திகளை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மூன்று போர் வானூர்தி தயாரிப்பாளர்கள் தமது உற்பத்திகளான போர் வானூர்திகளை கனேடிய வான்படைக்கு விற்பனை செய்வதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், கனேடிய வான்படையின் தேவைகளுக்கு எது பொருத்தமானது என்பதை தீர்மானிக்க அரசாங்க மதிப்பீட்டாளர்கள் தற்போது, தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த மதிப்பீட்டுப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து, அடுத்த ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 2025இல் முதலாவது போர் வானூர்தி விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.