சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி கோட்டாயப ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடலின் நீடிப்பாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா- இந்திய சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சிறிலங்காவின் சுகாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பதாக கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மருத்துவமனையில் இருதய சிகிச்சைப் பிரிவொன்றை ஸ்தாபித்தல், யாழ். மருத்துவமனையில் மகப்பேறு பிரிவொன்றை நிர்மாணித்தல், தங்கல்லை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல் மற்றும் தெஹியத்தகண்டிய மருத்துவமனையைத் தரமுயர்த்தல் போன்ற சுகாதாரத்துறை திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் உட்பட அரசாங்கத்துக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.