எவர் கிவன் என்ற இராட்சத கொள்கலன் கப்பல், ஆறு நாட்களாக சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டதால், ஏற்பட்ட மொத்த இழப்பு 100 கோடி டொலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சூயஸ் கால்வாய் வழியாக சென்ற போது, எவர் கிவன் என்ற கப்பல் காற்றினால், திசை திரும்பி, தரைதட்டியதால், ஆறு நாட்களாக அனைத்து போக்குவரத்துகளும் தடைப்பட்டன.
சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கிக் கொண்டதால், 360-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் போக்குவரத்து செய்ய முடியாமல், இருபுறமும் அணிவகுத்து நின்றன.
இதனால் சர்வதேச வர்த்தகத்துக்கு, தினமும் 15 மில்லியன் டொலர்கள் வரை இழப்பு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தரைதட்டி நின்ற கப்பலை மீட்க செலவழிக்கப்பட்ட தொகையையும், கணக்கிட்டால், மொத்த இழப்பு, 100 கோடி டொலர்கள் வரும் எனவும், போக்குவரத்து தடையால் எகிப்து அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு 1.4 கோடி டொலர் கள் இழப்பு ஏற்பட்டதாகவும், சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது,