தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மகளிர் தாய்மார்களை பற்றி அவதூறு பரப்பி வரும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.
ஸ்டாலின் ஊழலை பற்றி பேசி வருகிறார். அவர் திமுகவை அப்படியே திரும்பி பார்க்க வேண்டும். 2-ஜி அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் அந்த கட்சி சிக்கி இருக்கிறது. தி.மு.க. என்பது அரசியல் கட்சி அல்ல. அது ஒரு வர்த்தக நிறுவனமாக செயல்படுகிறது.
தமிழக மக்களை காப்பாற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேநேரம் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மக்களை பற்றிய கவலை இல்லை. மாறாக அவர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்தே கவலைப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.