தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வால் முன்மொழியப்பட்ட குறித்த தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு நேரத்தில் அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் குறித்த தீர்மானம் முன்வைக்கப்படும் என நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.
15 உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக்குழு, சபாநாயகர் நியமித்த ஆறு மாதங்களுக்குள் குழுவின் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு, தற்போதுள்ள தேர்தல் முறைமை மற்றும் அதன் கட்டமைப்பின் குறைபாடுகளை அடையாளம் காணவும், திருத்தங்களையும் பரிந்துரைகளையும் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது