பைசர் கொரோனா தடுப்பூசி 91சதவீதம் நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பைசர் நிறுவனத்திடம் கனடா கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்கான முற்பதிவுகளைச் செய்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த ஆறுமாதங்களுக்குள் இந்த தடுப்பூசியின் உற்பத்தி விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த தடுப்பூசியின் மருந்தளவானது மாறுபட்ட நோயெதிர்ப்பு சக்திகளை செலுத்தப்பட்ட பின்னர் காண்பித்துள்ளதாகவும் மேலும் சில ஆய்வுத்தகவல்கள் கூறியுள்ளன.
குறிப்பாக தென் ஆபிரிக்க நாடுகளில் அவ்விதமான நிலைமைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.