நைஜீரிய விமானப்படை விமானம் ஒன்று, ராடர் திரையில் இருந்து மறைந்து காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வட-கிழக்குப் பகுதியில் வழக்கமான கண்காணிப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
போர்னோ (Borno) மாகாணத்தில், புதன்கிழமை போகோ ஹராம் (Boko Haram) கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரசுப் படைகளுக்கு ஆதரவாக இந்த விமானம் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது என்று நைஜீரிய விமானப்படைப் பேச்சாளர் கூறியுள்ளார்.
விமானம் எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்தோ, அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்தோ நைஜீரிய விமானப்படை தெளிவான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.