சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட வியத்மக அமைப்புடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரியான, மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசவை சந்தித்து, மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, சிறிலங்கா இராணுவத்தின் வன்னிப் படைகளின் கட்டளை அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றியிருந்தார்.
இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட வியத்மக அமைப்பில் இணைந்து செயற்பட்ட அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.