வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கான ஊதிய வருவாய்க்கான வரி விலக்கு தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பதிவில், நிதிச் சட்டம் 2021 திருத்தம் என்பது, வருமான வரி சட்டத்தில், வரி விதிப்புக்கு உட்பட்டது. இதன்படி வளைகுடா நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டுவாழ் இந்திய குடிமக்களின் ஊதிய வருவாய் மீதான வரிவிதிப்பு முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.