ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க, இத்தாலியில் மூன்று நாட்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பிராந்தியங்களும் இப்போது சிவப்பு மண்டலத்திற்குள் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் உயிர்த்தஞாயிறு வழிபாடுகளில் நேரடியாக பங்கேற்பதை தவிர்க்குமாறும், பாப்பரசர் கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் காணொளி ஊடாக வழிபாடுகளைச் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.