சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கனடியர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதற் தடவையாக மெய்நிகர் வழியில் சந்திப்பதற்கும் ஆலோசனைகள் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு மேலதிகமான வழிகாட்டல்களும் அளிக்கப்பட்டதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவில் உளவு பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு வருடங்களுக் கு முன்னர் கைது செய்யப்பட்ட இரு கனடியர்கள் மீது இந்த ஆண்டின் முற்பகுதியிலிருந்து சீன நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டதாக நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள் அனைத்தும் மூடிய அறைக்குள்ளேயே நடைத்தப்படுகின்றது. இதனை இட்டு பீஜிங்கில் உள்ள கனடிய இராஜதந்திரக் கட்டமைப்பு தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது, அக்கனடியர்களுக்கு மெய்நிகர் வழியில் ஆலோசனைகளை வழங்குவதற்கு சீனா அனுமதி அளித்துள்ளது.
எனினும் அதற்கும் பல மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.