ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ள “மாகாணம் தழுவிய அவசரகால தடுப்பு” என்ற பெயரிலான முடக்க நிலை இன்று அதிகாலை 12 மணி 01 நிமிடத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த முடக்க நிலை குறைந்தபட்சம், நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய உணவகங்கள் அனைத்திலும் உணவருந்தலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் உடற்பயிற்சிக் கூடங்களும் மூடப்படும்.
அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் 50 சதவீத கொள்ளளவுடனும், அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள், 25 சத வீத கொள்ளளவுடனும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.