அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள, கப்பிட்டல் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கப்பிட்டல் கட்டிடத்துக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலய பகுதியில் மர்ம நபர் ஒருவர் தனது வாகனத்தினால், வீதி தடுப்பு மீது மோதியதில், 2 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இதன்பின்னர் வாகனத்தில் இருந்து குதித்த சாரதி, காவல்துறை அதிகாரிகளை கத்தியால் குத்தியதில், ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, காவல்துறையினரால், குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கப்பிட்டல் கட்டடம் முடக்கப்பட்டு, கட்டடத்தின் உள்ளே செல்வதற்கும், வெளியேறுவதற்கும், தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல என்று வொசிங்டன் பெருநகர காவல்துறைய அதிகாரி தெரிவித்துள்ளார்.