இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
நிறைவடைந்த 24 மணி நேரத்தில், புதிதாக 81 ஆயிரத்து 466 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு பின்னரான 6 மாதங்களில் இதுவே அதிகபட்ச அதிகரிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.