தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் யோகேஸ்வரன் கத்திகுத்து தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
நாவற்குழி 300 வீட்டுத்திட்ட பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாவற்குழி 300 வீட்டுத்திட்ட பகுதியில் மோதல் சம்பவம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போதே, பிரதேச சபை உறுப்பினர் மீது கத்தியால் குத்தியும், கற்களால் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அறிந்து விரைந்து சென்ற, பிரதேச சபை உறுப்பினருக்கு நெருக்கமானவர்கள், படுகாயமடைந்த நிலையில் இருந்த, அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் யோகேஸ்வரன், திட்டமிட்டு குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.