யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின், கைவிரலைக் கடித்தார் என்ற குற்றச்சாட்டில், இளைஞன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில் இரவு பாதுகாப்புச் கடமையிலிருந்த சிறிலங்கா காவல்துறையினருக்கும், அங்கு பணிபுரியும் இளைஞனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நிகழ்ந்த கைகலப்பின் போது, காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.
காயத்துக்குள்ளான சிறிலங்கா காவல்துறை அதிகாரி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.