எதியோப்பியாவின் திக்ரே (Tigray) பிராந்தியத்தில் உடனடியாக மனிதாபிமான உதவிக் குழுக்களை அனுமதிக்க வேண்டும் என்று கனடா மற்றும் ஜி 7 நாடுகள் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளன.
பிரான்ஸ், ஜேர்மனி , இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இணைந்து கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ (Marc Garneau) இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பாரிய படுகொலைகள், பாலியல் மற்றும் பாலிய அடிப்படையிலான வன்முமுறைகள், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் எரித்ரிய அகதிகள், பலவந்தமாக இடம்பெயர வைக்கப்படுதல் போன்றவற்றை கண்டிப்பதாக, இந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக சுதந்திரமான, வெளிப்படையான, பக்கசார்பற்ற, விசாரணைகள் முன்னெடுக்கப்பட