தாய்வானின் கிழக்கு பகுதியில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தொடருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை சுரங்கப் பாதையில் பயணம் செய்த தொடருந்து ஒன்று, பார ஊர்தி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை அடுத்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளில், இதுவரை 50 பேர் உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 146 பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என்று தாய்வான் போக்குவரத்து அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளதுடன், மேலும் பலர், சுரங்கபாதைக்குள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொறியியல் பராமரிப்பு குழுவுக்கு சொந்தமான பாரஊர்தி ஒன்று தொடருந்துப் பாதையில் நிறுத்தப்பட்டிருந்தே, விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தாய்வான் தொடருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.