கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ள சிவப்புப் பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய முடியாது என்று பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
அயர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும், இந்த நான்கு நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களும் பத்து நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கிறீஸ், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.