பெண்ணொருவர் ஏழு துண்டங்களாக வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 32 வயதான பெண் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கொலை தொடர்பாக 24 வயதுடைய ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் குறித்த சந்தேக நபர் பாலியல் உறவு கொண்டு பின் கொலை செய்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
அந்தப் பெண்ணை கொலை செய்த பின், அவரின் உடை மற்றும் ஏனைய பொருட்களை குப்பைத் தொட்டிகளில் மற்றும் வனப்பகுதிகளில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த பெண் உயிரோடு இருப்பதாக வெளிப்படுத்திக் கொள்வதற்காக சந்தேக நபர் பெண்ணின் கைப்பேசியை உபயோகித்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.