பெரும்பாலான கனடியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை விரும்புவதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், கடந்த காலத்தினைவிடவும் தற்போது வீட்டிலிருந்து பணியாற்ற விரும்புபவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் ஆரம்ப காலத்தில் 80சதவீதமானவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றி வந்தனர். எனினும் இதில் அனைவரும் அவ்வாறானநிலைமை தொடர வேண்டும் என்று சிந்தித்திருக்கவில்லை.
ஆனால், தற்போது பாடசாலை ஆசிரியர்களே வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கே அதிகமானவர்கள் விரும்புகின்றார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பான அச்சமும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.