யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொதுச் சந்தையில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாண நகரில், 84 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் போது அவருக்கும் கொரோனா தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினார் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.