அசாமில் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரம், இருந்த காணொளி வெளியானதை அடுத்து, 4 அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அசாமில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த பின்னர், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு வெள்ளை நிற வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் இருப்பதை கண்ட பொதுமக்கள், சாரதியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் தப்பி ஓடியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை, செய்தியாளர் ஒருவர் காணொளி எடுத்து டுவிட்டரில் பதிவிட்டதை அடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரத்துடன் பொதுமக்கள் சிறைப்பிடித்த வாகனம், பாஜ.க சட்டமன்ற உறுப்பினரான கிருஷ்ணேந்து பாலுவுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
அவரது வேட்பு மனுவில் குறித்த வாகனத்தை வைத்திருப்பது குறித்த விபரங்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் நான்கு அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்துள்ளது