கியூபெக்கில் அடுத்தடுத்து 8 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை பிற்பகல் மொன்றியல் (Montreal) நகரில் பேரணி இடம்பெற்றுள்ளது.
கியூபெக்கில் கடந்த எட்டு வாரங்களில் எட்டு பெண்கள், அவர்களின் தற்போதைய அல்லது முன்னாள் வாழ்க்கைத் துணையினால், கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான ஒரு தொற்று நோய் போன்று இடம்பெறும் இந்த கொலைகளைக் கண்டித்து, நேற்று பிற்பகல் பெண்கள் மொன்றியல் நகர வீதிகளில் அணிவகுத்துச் சென்றுள்ளனர்.
நகரின் ஆறு பகுதிகளின் ஊடாக இந்தப் பேரணி நகர்ந்து சென்றுள்ளது.
இந்தப் பேரணியில் பங்கேற்ற பெண்கள் அமைப்பு ஒன்றில் பிரதிநிதி, கனடாவில், இரண்டு நாட்களுக்கு ஒரு பெண் அவரது கணவனால் அல்லது முன்னாள் வாழ்க்கைத் துணையினால் கொலை செய்யப்படுகிறார் என்றும் இந்த நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.