மியன்மாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அந்த நாட்டு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இன்றும் பலர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் இயங்கும் மனித உரிமைகள் குழு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையில் மியன்மாரில் 550 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் 46 சிறார்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக கோட்பாடுகளை மீறி இராணுவத்தினர் ஆட்சியினை கைப்பற்றியுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து மியன்மாரின் பல நகரங்களில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ப்பட்டு வருகின்றன.