உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்க வேண்டும் என்று, மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறு செய்தியில் மேலும்,
இரண்டு வருடங்களுக்கு முன்னர், இந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, பாஸ்கா திருவிழா திருப்பலிக்காக சென்றிருந்த எத்தனையோ மக்கள் குண்டுவெடிப்பு காரணமாக உயிர் இழந்தார்கள்.
அவர்களை இன்றைய தினம் நாம் விசேடமாக நினைவு கூறுவோம்.
அவர்களுக்கு உண்மையான நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்கப் பெற வேண்டும் என்று நாம் இறைவனிடம் மன்றாடுவோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.